ஹார்முஸ் நீரிணையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க சட்டத்தை உருவாக்கிய ஈரான்
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு சுங்கக்கட்டணம் (toll) விதிக்கும் சட்டத்தை உருவாக்கி வருகிறது.
இந்த சட்டம் அடுத்த வாரம் ஈரான் நாடாளுமன்றத்தில் இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ஹார்முஸ் நீரிணை மீது ஈரானின் அதிகாரத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முயற்சி செய்யப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களை உலக சந்தையுடன் இணைக்கும் முக்கிய கடல் பாதையாகும்.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் இந்த நீரிணை பெரும்பாலும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. சில ஈரான் மற்றும் சீனாவுடன் தொடர்புடைய கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பான அனுமதி பெற்று பயணம் செய்துள்ளன.
இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டால், கப்பல்கள் பாதுகாப்பான பயணத்திற்காக 2 மில்லியன் டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
இது சர்வதேச கடல்சார் சட்டங்களின் சுதந்திரமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணாக இருக்கும் என்பதால், கப்பல் நிறுவனங்கள் குழப்பத்தில் உள்ளன.
இந்த நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எண்ணெய் விலை 114 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்து குறைந்ததால் அரபுக் கடலோர நாடுகளின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தக சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்பும் இந்த சட்டம், உலக பொருளாதாரத்துக்கு புதிய சவால்களை உருவாக்கும் நிலையில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |