அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு... ஈரான் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்
ஈராக் பிரதேசத்தில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்திசாலித்தனமான முயற்சி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஈரான் தாக்குதலை முன்னெடுக்கும் என்றே இஸ்ரேல் உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஈராக்கில் இருந்து ஏராளமான ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈராக்கில் ஈரான் ஆதரவு போராளிகள் மூலமாக தாக்குதலை நடத்துவதால் ஈரானில் உள்ள முதன்மையான இலக்குகளுக்கு எதிரான மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலைத் தவிர்க்க ஈரானின் புத்திசாலித்தனமான முயற்சியாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலானது நவம்பர் 5ம் திகதி முன்னெடுக்கப்படுகிறது. பல மாகாணங்களில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.
கமலா ஹரிஸ் உறுதி
குறிப்பிட்ட சில மாகாணங்களில் கடும் போட்டி இருந்தாலும், பெரும்பாலான மாகாணங்களில் டொனால்டு ட்ரம்புக்கான வெற்றி வாய்ப்பு குறைவு என்றே வெளிவரும் கருத்துக்கணிப்புகளில் இருந்து தெரிய வருகிறது.
அத்துடன், ஜோ பைடனின் கொள்கைகள் மற்றும் ஆட்சி போன்று தமது நிர்வாகம் இருக்காது என்றே கமலா ஹரிஸ் உறுதி அளித்துள்ளார். மட்டுமின்றி, இளையோர்கள் மத்தியில் ட்ரம்புக்கு எதிரான மன நிலையும் இருப்பதால்,
குறிப்பிட்ட சதவிகித மக்கள் ட்ரம்ப் ஆட்சிக்கு வரவேண்டும் என ஆதரவளிப்பதாலும், தேர்தல் முடிவுகள் தற்போதைய கணிப்புகலில் இருந்து மாறுபடலாம் என்றும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |