நாட்டு மக்களுடன் மோத விரும்பவில்லை: பகிரங்க மன்னிப்பு கேட்ட ஈரான் ஜனாதிபதி
ஈரானில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறை கையில் எடுக்கப்பட்டதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்ட வெடிப்பு
ஈரான் முழுவதும் உள்ள கடைகளில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஆகியவை மக்களிடையே பெரும் போராட்டத்தை தொடங்கி வைத்தது.
அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வெடித்த போராட்டமானது அங்காங்கே வன்முறையாக வெடித்தது.

போராட்டத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அடக்குமுறையை கையில் எடுத்தது. அடக்குமுறை நடவடிக்கையில் கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கோரிய ஜனாதிபதி
இந்நிலையில் மக்கள் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய ஒடுக்குமுறை மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த மன்னிப்பு கோரியுள்ளார் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்.
47வது புரட்சி தின விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் வருத்தப்படுகிறேன், நடந்த சம்பவங்கள் மிகுந்த வேதனை தருவதாகவும், இதற்காக வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டு மக்களுடன் மோத நாங்கள் விரும்பவில்லை, போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ தயாராக இருப்பதாக மசூத் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |