ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி? அமெரிக்க செனட்டரின் பகீர் கருத்து
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஆபத்தான தரையிறக்கத்தை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க செனட்டரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்தில் சிக்கிய இப்ராஹிம் ரைசி
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் மோசகமாக தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் விபத்தை தொடர்ந்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நலம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இது உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஜூன் 2021 ல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதியாக தெரிவாகும் முன்பே ஈரானில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.
அமெரிக்க செனட்டரின் தீவிரமான கருத்து
இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி ரைசின் பயணித்த ஹெலிகாப்டரில் ஏற்பட்ட விபத்தை வரவேற்கும் விதமாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிக் ஸ்காட் பரபரப்பான கருத்து ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
If Raisi is dead, the world is now a safer & better place.
— Rick Scott (@SenRickScott) May 19, 2024
That evil man was a tyrant & terrorist. He was not loved or respected & he will be missed by no one. If he’s gone, I truly hope the Iranian people have the chance to take their country back from murderous dictators.
அதில், "ரைசி யாராலும் நேசிக்கப்படவில்லை அல்லது மதிக்கப்படவில்லை, அவர் இறந்தால் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். அவர் மறைந்தால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க ஈரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.
ஸ்காட்டின் கருத்துக்கள் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்க கூட்டாளிகள் உட்பட, ரைசியின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கும் ஏராளமான வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் நாடுகளின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |