அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை: ஈரான் முன்வைக்கும் 3 கட்டத் திட்டம்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மூன்று கட்டத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தை ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய வரைவுத் திட்டத்தை தயாரித்து இருப்பதாக அல் மயாதீன்(AL Mayadeen) செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சர்வதேச மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய வரைவு திட்டம், அணுசக்தி விவகாரங்களுக்கு முன்னதாக பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை முதன்மையாக கொண்டு அதனை தணிப்பதற்கான முன்னுரிமை அளிக்கிறது.
நம்பிக்கையை நோக்கமாக கொண்ட இந்த திட்டத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு பேச்சுவார்த்தையானது முன்னேறும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் முன்வைக்கும் மூன்று கட்டங்கள்
முதல் கட்டம் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தாது என்பதற்கான முறையான உத்தரவாதங்களை வழங்குதல் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் கட்டத்தில், ஓமன் நாட்டுடன் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியை கூட்டாக நிர்வகிப்பது மற்றும் பிராந்திய உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பது குறித்து விவாதிப்பது ஆகும்.
இரண்டு கட்டங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே, மூன்றாம் கட்டத்தில் ஈரானின் அணுசக்தி தொடர்பான சிக்கலான விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்தைகள் முன்னெடுக்கப்படும்.
இந்த ராஜதந்திர திட்டம் தொடர்பான செய்திகள் வெளியானாலும், ஈரான் அரசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |