ஹார்முஸில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் 40 பில்லியன் டொலர் திட்டம்
ஈரான், உலகின் முக்கியமான நீரிணைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஆண்டுக்கு சுமார் 40 பில்லியன் டொலர் வறுய்வாய் ஈட்டலாம் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாக தினமும் உலகின் எண்ணெய் உற்பத்தியின் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்கிறது. ஈரான் அரசு, பாதுகாப்பு, சுற்றுசூழல் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்காக கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க விரும்புகிறது.

சமீபத்தில் அமேரிக்கா-ஈரான் இடையே 60 நாள் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டது.
ஈரான் இந்த திட்டம் குறித்து வளைகுடா நாடுகள் மற்றும் சீனாவுடன் விதித்துள்ளது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்த யோசனையை கடுமையாக எதிர்த்துள்ளன.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ, "சர்வதேச நீரிணைகளில் நாடும் கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை. இது உலகளாவிய குழப்பத்தை ஏற்படுத்தும்" என எச்சரித்துள்ளார்.
ஓமன் வெளிவிவகார அமைச்சர் கூட, "ஹார்முஸ் நீரிணை சர்வதேச கப்பல்களுக்கு எப்போதும் இலவசமாக இருக்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஈரான், 1936-ஆம் ஆண்டு கையெழுத்தான மான்ட்ரோக்ஸ் ஒப்பந்தத்தின் (Montreux Convention) கீழ், கருங்கடல் மற்றும் ,மத்திய தரைக்கடலை இணைக்கும் டார்டனெல்ஸ் (Darnenelles) நீரிணையை துருக்கி கட்டுப்படுத்தி கட்டணம் வசூலிப்பது போலத்தான் இது, என எடுத்துக்காட்டை முன்வைத்து வாதிடுகிறது.
இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், உலக வர்த்தக செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் சர்வதேச வர்த்தகத்தில் பெரிய தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |