நாடொன்றில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 6126 ஆக உயர்வு: அமெரிக்காவுடன் தீவிரமடையும் மோதல்
ஈரானில் நடந்த போராட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6126 ஆக அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் போராட்டம்
ஈரானில் அதிகரித்து வந்த பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் தெஹ்ரானின் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர்.
நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டக்காரர்களுக்கும் நாட்டின் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்து வன்முறையாக மாறியது.
மேலும் நிலைமையை கட்டுப்படுத்த அரசு நாட்டின் இணைய சேவையை துண்டித்தது.
பலி எண்ணிக்கை உயர்வு
இந்நிலையில் ஈரான் போராட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
The people of Iran staged widespread demonstrations against the Islamic Republic regime on Monday. The latest series of #IranProtests were sparked by death of 22 y/o girl #MahsaAmini after arrest, beating over hijab. Below are some videos of these protests, starting with Tehran. pic.twitter.com/Ur18emoIwc
— Ali Javanmardi (@Javanmardi75) September 19, 2022
மீட்புக் குழு அதிகாரிகள் வழங்கிய தகவலில், போராட்டத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 6,126 ஆக உயர்ந்து இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
மேலும் இன்னும் பலரை காணவில்லை என்றும், இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |