செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சீனாவுக்கு மாற்ற திட்டம்: ஈரான் எடுத்த முக்கிய முடிவு
ஈரான் தன்னுடைய செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சீனாவுக்கு மாற்ற சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஈரான் எடுத்த முக்கிய முடிவு
ஈரான் தன் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையாளுவதில் கடைபிடித்து வந்த நிலைப்பாட்டை தற்போது மாற்றிக் கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் எதிர்கால உடன்படிக்கைகள் அனைத்திலும், ஈரான் தங்கள் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சீனாவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கு முன்னதாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான உத்தரவாதத்தை சீனா வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை ஈரான் எதிர்பார்க்கிறது.
இதற்கு முன்னதாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறு நாடுகளுக்கு மாற்றுவது தொடர்பான திட்டத்திற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான யுரேனியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் சிக்கலாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |