'நாங்கள் கேட்டது இன்னும் கிடைக்கவில்லை' அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு!
அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இடைத்தரகு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள தயாராக இல்லை என்று ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏனெனில், தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்க வாஷிங்டன் போதுமான அளவு நடவடிக்கைகளை செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பைடன் நிர்வாகம், 2015 அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மீண்டும் திரும்ப உறுதியளித்து, இரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தது.
ஆனால், இரான் ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்னென்ன நடவடிக்கைகளை ஏற்கும் என்று அறிந்துகொள்ளாமல், அதற்கான பேசுவரத்தைக்கு முன்பே பொருளாதாரத் தடைகளை நீக்குவது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில், 2018-ல் டொனால்ட் டிரம்ப் விலகிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்புவதற்கு அமெரிக்கா இன்னும் ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஈரான் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளது.
ஈரான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மறுத்ததை விளக்கிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Saeed Khatibzadeh “அமெரிக்கா மற்றும் மூன்று ஐரோப்பிய நாடுகளின் சமீபத்திய நிலைகள் மற்றும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளரால் முன்மொழியப்பட்ட இந்த முறைசாரா கூட்டத்தில், பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் இது இல்லை என்று ஈரான் கருதுகிறது" என்றார்.
Khatibzadeh மேலும் கூறியதாவது “அமெரிக்க நிலைப்பாட்டிலும் நடத்தையிலும் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை, மேலும் பிடன் நிர்வாகம் ட்ரம்பின் தோல்வியுற்ற அதிகபட்ச அழுத்தக் கொள்கையை கைவிடவில்லை என்பது மட்டுமல்லாமல், UN resolution 2231-ல் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை கூட அறிவிக்கவில்லை” என்றார்.