அணுசக்தி திட்டத்திற்கு எதிராக அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் சபாநாயகர் அதிரடி
Iran Rejects Nuclear Program Negotiations with US: அணுசக்தி திட்டத்தில் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்று ஈரான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார்.
அணுசக்தி திட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்
அமெரிக்கா - ஈரான் இடையே மோதலானது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், எத்தகைய சூழ்நிலையிலும் அல்லது எந்தவொரு அழுத்தத்திற்கு மத்தியிலும் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தையானது நடத்தப்படாது என ஈரானின் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் அலி நிக்சாத்(Ali Nikzad)திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அலி நிக்சாத், ஈரான் முன்வைத்த 7 முக்கிய நிபந்தனைகளை அமெரிக்கா நிபந்தனைகள் இன்றி ஏற்றுக் கொண்டால் மட்டுமே தற்போது நடைபெற்று வரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதற்கு சக்தி வாய்ந்த மற்றும் எல்லையற்ற மிகப்பெரிய உடனடி பதிலடியை ஈரான் கொடுக்கும் என்றும் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவிடம் ஈரான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகள்
ஈரானுக்கு எதிரான அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
முடக்கப்பட்ட ஈரானின் அனைத்து சொத்துக்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
ஈரானுக்கு எதிரான கடல் வழி முற்றுகையை உடனடியாக விலக்கி கொள்வதுடன், ஈரானின் எண்ணெய் துறை மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்க வேண்டும்.
அமெரிக்கா நடத்திய இந்த போரினால் ஏற்பட்டுள்ள சேதங்களை ஈடுகட்ட உரிய நிதி இழப்பீடு ஈரானுக்கு வழங்கப்பட வேண்டும்.
அமெரிக்க படைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும்.