கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா., பேச்சுவார்த்தைக்கு திட்டமில்லை என அறிவித்த ஈரான்
அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் சூழ்நிலை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்கா, ஈரானின் சரக்கு கப்பலை கைப்பற்றியதைத் தொடர்ந்து, “புதிய பேச்சுவார்த்தைக்கு எங்களிடம் எந்தத் திட்டமும் இல்லை” என்று ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “போருக்கு முடிவு காண பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் குழுவை அனுப்புகிறோம்” என்று தெரிவித்தார்.
ஆனால், அதே நேரத்தில், ஈரானின் எரிசக்தி அமைப்புகளை தாக்குவோம் என்ற எச்சரிக்கையும் விடுத்தார்.

இதையடுத்து, “அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினாலும், அவர்கள் நடத்தை எந்த விதத்திலும் உண்மையான தூதரக முயற்சியை காட்டவில்லை. கப்பல்களை கைப்பற்றுதல் மற்றும் கடற்படை முற்றுகை ஆகியவை சமாதான ஒப்பந்தத்தை மீறும் செயல்களாகும்” என்று ஈரான் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதால், உலக எண்ணெய் சந்தையில் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஈரானின் எண்ணெய் வருவாயை தடுக்க கடற்படை முற்றுகையை வலுப்படுத்திய நிலையில், ஈரான் “அமெரிக்காவின் ஆயுதக் கடற்படை கொள்ளைக்கு விரைவில் பதிலடி கொடுப்போம்” என்று எச்சரித்துள்ளது.
இச்சுக்குழலில், பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழ்நிலை மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |