2 அமெரிக்க அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்ட ஈரான்: எதற்காக தெரியுமா?
ஈரானில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமான இரண்டு அமெரிக்க அதிகாரிகளை குற்றவாளிகள் என ஈரான் அறிவித்துள்ளது.
பள்ளி மீது ஏவுகணை தாக்குதல்
ஈரானின் உச்ச தலைவர் கமெனி கொல்லப்பட்ட அன்று, ஈரானின் மினாப் நகரில் அமைந்துள்ள ஷஜரே தையோபா சிறுமிகள் ஆரம்ப பள்ளி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் சிறுமிகள், ஆசிரியர்கள் என மொத்தம் 165 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இந்த ஏவுகணை தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று ஆரம்பத்தில் அமெரிக்கா கூறினாலும் பின்னர் தவறான வரைபட தரவுகள் காரணமாக இந்த தாக்குதல் நடந்து விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருந்தனர்.
அமெரிக்க அதிகாரிகளின் புகைப்படங்கள்
இந்நிலையில் ஜரே தையோபா சிறுமிகள் ஆரம்ப பள்ளி மீது ஏவுகணை தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த இரண்டு அமெரிக்க கடற்படை உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை ஈரான் வெளியிட்டுள்ளது.

அதில், லெய் ஆர். டேட் (Leigh R Tate) மற்றும் ஜெப்ரி இ. யார்க் (Jeffrey E York) ஆகிய இரண்டு அமெரிக்கா அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த இரண்டு குற்றவாளிகளையும் நினைவில் கொள்ளுங்கள் என்று இவர்களின் புகைப்படங்களை இந்தியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஈரானிய தூதரகங்கள் அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட அதிகாரிகள் USS ஸ்ப்ருவான்ஸ் போர் கப்பலில் இருந்து டோமாஹாக் ஏவுகணைகளை ஏவ மூன்று முறை உத்தரவிட்டுள்ளனர் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |