ஏகப்பட்ட விமானங்களுடன் பாரசீக வளைகுடாவில் அமெரிக்க போர் கப்பல்! வீடியோ ஆதரத்தை வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்
பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி போர் கப்பல் பயணிக்கும் ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி. வெளியிட்டுள்ளது.
டிரம்ப்-க்கு பிறகு பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்ற பிறகும் ஈரான் உடனான பிரச்சினைக்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
தற்போதும் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் நீடித்து வருகிறது.
இவ்வாறான சூழலில் பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பல் பல போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் மற்ற இராணுவ சாதனங்களுடன் பயணப்பதை ஈரான் துல்லியமாக தனது ட்ரோன் மூலம் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது.
Iran's IRGC drone takes precise footage as it flies over US aircraft carrier in the Persian Gulf pic.twitter.com/q0xEfoty7v
— Press TV (@PressTV) April 21, 2021
அதே சமயம், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான அனைத்தையும் தங்கள் படைகள் தாக்கி அழிக்கக்கூடும் என ஐ.ஆர்.ஜி.சி. தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.