அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் :பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய இருதரப்பும் சம்மதம்
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்திற்கு ஈரான் பதிலளித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர்
அமெரிக்கா பகிர்ந்த போர் நிறுத்தம் தொடர்பான திட்டம் குறித்து ஈரான் அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளது.
IRNA வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்த பேச்சுவார்த்தை திட்டங்கள் பலமான மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் உதவியுடன் நடைபெறுகிறது.

மேலும் அதில் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த அமைதி திட்டமானது அடிப்படை கட்டமைப்பாக இருக்கும் என்று ஈரான் பதிலளித்து இருப்பதாக IRNA தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த அமைதி திட்ட ஒப்பந்தத்தில் ஈரானின். அணுசக்தி திட்டங்கள் மற்றும் யுரேணியம் செறிவூட்டல் குறித்து எந்தவொரு அம்சங்களும் அந்த திட்டத்தில் இல்லை என கூறப்ப்டுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான எச்சரிக்கைகளுக்கு பிறகு, இந்த உடன்படிக்கையை ஈரான் பதிலளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |