$25 பில்லியன் மதிப்புள்ள புதிய அணுசக்தி ஒப்பந்தம்: ஈரான்-ரஷ்யா இடையே கையெழுத்து
ஈரான்-ரஷ்யா இடையே பல மில்லியன் டொலர் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஈரான்-ரஷ்யா இடையே அணுசக்தி ஒப்பந்தம்
ரஷ்யாவின் ரோஸாட்டம் எரிசக்தி திட்டத்துடன் (Rosatom Energy Projects) இணைந்து ஈரானின் ஹார்மோஸ் நிறுவனம் (Hormoz Company) தென்கிழக்கு ஈரானின் புதிய அணுமின் நிலையத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை கையெழுத்தான இந்த ஒப்பந்தம் சுமார் $25 பில்லியன் மதிப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள சிரிக்(Sirik) பகுதியில் 500 ஹெக்டேர் பரப்பளவில் புதிய அணுமின் நிலையமானது கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இரு நாட்டு பிரதிநிதிகள் ஒப்புதல்
இந்த திட்டத்தின் ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்தி நிலையமான (AEOI) சார்பாக நாசர் மன்சூர் ஷரிஃபுல், ரஷ்யாவின் சார்பாக ரோஸாட்டம் எரிசக்தி திட்டத்தின் டிமிட்ரி ஷிகனோவ் கையெழுத்திட்டு இதனை உறுதிப்படுத்தினர்.
ரஷ்யாவும், டெஹ்ரானும் இந்த வார தொடக்கத்தில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |