இரத்த சிவப்பாக காட்சியளித்த கடற்கரை! ஈரான் ஹார்மோஸ் தீவின் ரகசியங்கள்?
ஈரானில் கனமழையின் போது கடற்கரை முழுவதும் ரத்த சிவப்பாக மாறிய அரிய காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலான காட்சி
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், "பலத்த மழையின் ஆரம்பத்தில் ஹார்மோஸின் பிரபலமான சிவப்பு கடற்கரை" மற்றும் "சுற்றுலா பயணிகள் கண்ட அற்புதமான காட்சிகள்" என்ற தலைப்பிடப்பட்டு கடற்கரை முழுவதும் ரத்த சிவப்பாக மாறிய அரிய காட்சி ஒன்று காட்டப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் கனத்த மழை இரும்புச் சத்து நிறைந்த மண்ணை கடற்கரைக்கு அடித்துச் செல்வதையும், மணலும் கடல் நீரும் பிரகாசமான சிவப்பு நிறமாக மாறுவதையும் தெளிவாக சித்தரிக்கிறது.
சிவப்பு கடற்கரை எங்கு உள்ளது?
ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள இந்த ஹார்மோஸ் தீவு கடற்கரை "வானவில் தீவு" என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த காட்சிகள் ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல, இந்த தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் காணக்கூடிய ஒரு காட்சியாகும்.
சிவப்பு கடற்கரையின் அறிவியல் காரணம்
மண்ணில் உள்ள இரும்பு ஆக்சைட்டின் அதிக செறிவு காரணமாக இந்த குறிப்பிடத்தக்க சிவப்பு நிறம் ஏற்படுகிறது.
ஈரானிய சுற்றுலா வாரியத்தை மேற்கோள் காட்டிய CNN அறிக்கையின்படி, இந்த மண்ணிலிருந்து வரும் தாதுக்கள் கடல் நீருடன் கலந்து கடற்கரையின் தனித்துவமான சிவப்பு நிறத்தை ஏற்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது.
பொருளாதார முக்கியத்துவம்
உள்ளூரில் "கெலாக்" என்று அழைக்கப்படும் இந்த தனித்துவமான மண், பல தொழில்களில் பயன்பாடுகளைக் கண்டறிந்து கணிசமான மதிப்பைக் கொண்டுள்ளது.
வெளியான ஆய்வறிக்கைகளின் அடிப்படையில், இது தொழில்துறை செயல்முறைகள், அழகுசாதனப் பொருட்கள், சாயமிடுதல், மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடி உற்பத்தி ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
அத்துடன் உள்ளூர் மரபுகளின்படி, இந்த மண் ஜாம்கள் மற்றும் சாஸ்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
சுற்றுலா அனுபவம்
ஹார்மோஸ் தீவு சுற்றுலா பயணிகளும் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை ஏற்படுத்த கூடியது.
நீங்கள் இங்குள்ள கடற்கரையில் நடந்து செல்லும் போதும், சவாரிகள் செல்லும் போதும் உங்களை சுற்றியுள்ள மண்ணின் நிறங்கள் மாறுவதை பார்ப்பீர்கள்.
இங்கு சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதய காட்சிகள் மெய் மயக்குவதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
This red beach is a hidden gem in the world 😍 pic.twitter.com/QMCCEVP1mX
— The Sun (@TheSun) October 2, 2021
அத்துடன் இங்கு உண்ணக்கூடிய சிவப்பு மண் மற்றும் 70 வகையான பிற தாது மண்களையும் நீங்கள் பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |