நிபந்தனையற்ற சரணடைதல் கோரிய ட்ரம்ப்... ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் பதிலளித்த ஈரான்

Donald Trump Iran-Israel War
By Arbin Jun 18, 2025 04:10 AM GMT
Report

ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதலை ஜனாதிபதி ட்ரம்ப் கோரிய சில மணிநேரங்களில், இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் ஃபட்டா-1

நட்பு நாடான இஸ்ரேலின் குண்டுவீச்சு நடவடிக்கைகளில் அமெரிக்கா எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஆனால் மோதல் ஆறாவது நாளை எட்டுவதால் தங்களின் பொறுமை குறைந்து வருவதாகவும் ஈரானை அவர் எச்சரித்துள்ளார்.

நிபந்தனையற்ற சரணடைதல் கோரிய ட்ரம்ப்... ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் பதிலளித்த ஈரான் | Iran Says Hypersonic Missiles Fired At Israel

மாவட்டம் 18 எனப்படும் பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு இராணுவம் சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, புதன்கிழமை விடியற்காலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானிய தலைநகரை குறிவைத்தன.

இதனையடுத்து தெஹ்ரானின் பிரூசி, சபாலன் மற்றும் சயாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் டெல் அவிவ் குடியிருப்பாளர்களிடம் தாக்குதலுக்கு தயாராகுமாறு கூறியதுடன், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதன் ஹைப்பர்சோனிக் ஃபட்டா-1 ஏவுகணைகளை வீசியதாக தெரிவித்துள்ளது.

உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையை மூட திட்டமிடும் ஈரான்

உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையை மூட திட்டமிடும் ஈரான்

ஃபட்டா-1 ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3 என்ற பெருமைமிக்க நடவடிக்கையின் 11வது அலை மேற்கொள்ளப்பட்டது என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக பயணிக்கின்றன, மேலும் நடுவானில் கூட சூழ்ச்சி செய்ய முடியும், இதனால் அவற்றைக் கண்காணிப்பதும் இடைமறிப்பதும் கடினமாகிறது.

நிபந்தனையற்ற சரணடைதல் கோரிய ட்ரம்ப்... ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் பதிலளித்த ஈரான் | Iran Says Hypersonic Missiles Fired At Israel

கொத்துக் கொத்தாக ட்ரோன்களையும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவியுள்ளது. ஆனால் சாக்கடல் பகுதிக்கு மேல் இரண்டை இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இதனிடையே, இந்தப் போர் ஒரு பிராந்தியப் போராக மாறுவதைத் தடுக்கும் நம்பிக்கையில், உலக நாடுகள் ஒரு போர் நிறுத்தம் கோரி போராடி வருகின்றன. இந்த நிலையில் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசரமாக வெளியேறியபோது, ​​அமெரிக்க தலையீடு குறித்த ஊகங்கள் அதிகரித்தன.

எங்கே பதுங்கியிருக்கிறார்

ஆனால் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வெளிப்படையாக களமிறங்கும் என்றால், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கத் தயார் நிலையில் இருப்பது அமெரிக்காவை சிந்திக்க வைக்கும் என்றே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

நிபந்தனையற்ற சரணடைதல் கோரிய ட்ரம்ப்... ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் பதிலளித்த ஈரான் | Iran Says Hypersonic Missiles Fired At Israel

கனடாவில் இருந்து அவசர அவசரமாக வாஷிங்டன் திரும்பிய ட்ரம்ப், நிபந்தனையற்ற சரணடைதலை ஈரானிடம் கோரினார். மட்டுமின்றி, ஈரானின் உயர் தலைவரை அமெரிக்கா எளிதில் படுகொலை செய்ய முடியும் என்றும் ட்ரம்ப் பெருமையாகக் கூறினார்.

ஈரானின் உயர் தலைவர் எங்கே பதுங்கியிருக்கிறார் என்பது அமெரிக்காவிற்கு தெரியும் என்றும், நாங்கல் அவரைக் கொல்ல முடிவெடுக்கவில்லை எனவும் அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிபந்தனையற்ற சரணடைதல் கோரிய ட்ரம்ப்... ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் பதிலளித்த ஈரான் | Iran Says Hypersonic Missiles Fired At Israel

இஸ்ரேல் - ஈரான் விவகாரம் குறித்து விவாதிக்க அவர் தனது தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சந்தித்தார், ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீண்ட இந்தச் சந்திப்பிற்கு பிறகு உடனடி பொது அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் ஈரான் தொடர்பில் எந்தவொரு தலையீடு குறித்தும் ட்ரம்ப் இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை என்றே அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US