அணுசக்தி விவகாரம்., அமெரிக்காவுக்கு எந்தவொரு சலுகையும் வழங்க முடியாது: ஈரான் திட்டவட்டம்
அணுசக்தி தொடர்பான விவகாரத்தில் எந்தவொரு சலுகையும் ஈரான் வழங்காது என அந்நாட்டு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா மோதல் முடிவுக்கு வருமா?
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடவடிக்கைகளானது கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக உலகின் முக்கிய கடல் வழிப் பாதையான ஹார்முஸை ஈரான் ராணுவம் முடக்கி வைத்துள்ளது.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் ஈரானுக்கு சொந்தமான துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது.
இதற்கிடையில் ஏமனில் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் மத்திய கிழக்கில் பதற்றமானது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரான் மற்றும் அமெரிக்கா போர் நிறுத்த முன்மொழிவுக்கு முன்வந்துள்ளனர்.
இந்த முன்மொழிவின் படி, முக்கிய ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் முன்வந்துள்ளது.
அதைப்போல 7 நாட்களுக்கு லெபனான் உட்பட பல்வேறு முனைகளில் உள்ள ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை முடிவுக்கு வரவுள்ளது.
மேலும் ஈரானின் முடக்கப்பட்ட நிதிகள் விடுவிக்கப்படுவதுடன் ஈரான் மீதான எண்ணெய் தடைகளை அமெரிக்கா இந்த முன்மொழிவின் கீழ் தளர்த்தும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
முன்மொழிவில் எந்தவொரு சலுகையும் இல்லை
ஈரானுடைய நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றிய பிறகே, அணுசக்தி திட்டம் குறித்து விரிவான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாக உள்ள யுரேனியத்தை செறிவூட்டுவது மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரானில் இருந்து வெளியேற்றுவது போன்ற ஈரானின் உரிமை விஷயத்தில் தெஹ்ரான் அரசு எந்தவொரு சலுகையும் வழங்காது என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ஈரானிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.