படையெடுப்பிற்கு 10 லட்சம் பேர் தயார்: பகிரங்க அணு குண்டு தயாரிப்பு பரிசீலனையில் ஈரான்
அமெரிக்கப் படையெடுப்பிற்காக ஒரு மில்லியன் போராளிகள் தயார் நிலையில் இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.
தீவிர தாக்குதல்
உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்காவிற்கு எதிரான தீவிர தாக்குதல் குறித்து ஈரான் ஆலோசனை நடத்தி வருகிறது.
அதன் அடுத்தபடியாக, அமெரிக்கப் படையெடுப்பிற்காக ஒரு மில்லியன் போராளிகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக தற்போது ஈரான் கூறுகிறது.
அத்துடன் அணு குண்டு தயாரிப்பதற்கான கோரிக்கைகளையும் ஈரான் தற்போது தீவிரப்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
அந்நாட்டின் புரட்சிரக் காவலர் படையின் தலைவர்கள், இப்போது பகிரங்கமாக அணு ஆயுதத்தைத் தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.

கண்ணிவெடிகள்
அதேபோல், சாத்தியமான தரையிறங்கும் பகுதிகளில் ஆட்கொல்லி மற்றும் கவச வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் போன்ற பொறிகளைப் பதித்து, தீவை வலுப்படுத்த ஈரான் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம், ஈரானின் கடும்போக்கு நபர்களை ஒழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுகிறார்.
ஆனால் ஈரானின் போக்கு அவரது பேச்சுக்கு மாறாக இருக்கும் வகையில், ஒவ்வொரு புதிய தலைவரும் முந்தையவரை விடக் கடுமையானவராகவும், பழிவாங்கும் நோக்குடனும் கவனம் செலுத்துபவராக இருக்கின்றனர்.
முன்னதாக, அணு குண்டைத் தயாரிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஈரான் நீண்ட காலமாக கூறி வந்தாலும், ஒரு ஆயுதத்தைத் தயாரிக்கும் நோக்கில் இரகசியமாக யுரேனியத்தை செறிவூட்டி சேமித்து வருவதாக மேற்கத்திய உளவு நிறுவனங்கள் பகிரங்கமாக தெரிவித்தன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |