சரியான நேரத்தில் பதிலடி உறுதி.. மீண்டும் பீதியை ஏற்படுத்திய ஈரானிய தளபதி
ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பழி தீர்ப்பது உறுதி என தெரிவித்துள்ள ஈரான், எவரும் கணிக்க முடியாத வகையில் அது இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
பதட்டத்திலும் பீதியிலும்
ஈரானிய ராணுவ அதிகாரிகள் தரப்பு செவ்வாய்க்கிழமை தெரிவிக்கையில், எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்ற பதட்டத்திலும் பீதியிலும் தற்போதைக்கு இஸ்ரேல் இருக்கட்டும், ஆனால் பதிலடி என்பது கணிக்க முடியாததாக இருக்கும் என்பது மட்டும் உறுதி என தெரிவித்துள்ளனர்.
தெஹ்ரானில் ஜூலை 31ம் திகதி ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை இஸ்ரேல் பொறுபேற்கவோ மறுக்கவோ இல்லை.
இருப்பினும், ஈரான் மற்றும் அதன் பிராந்திய நடபு நாடுகள் ஹனியே படுகொலைக்கு காரணம் இஸ்ரேல் என்றும், பழிவாங்க வேண்டும் என்றும் சபதமெடுத்துள்ளது.
தாக்குதல் அச்சுறுத்தல்
இதனிடையே, கடந்த வாரம் ஈரானின் IRGC அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், ஹனியே படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவது என்பது தீவிரமான திட்டமிடலுக்கு அடுத்தே முன்னெடுக்கப்படும் என்றார்.
இதனால் காலதாமதமாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்காவின் பென்டகன் திங்கள்கிழமை தெரிவிக்கையில், உளவு அமைப்புகள் திரட்டியுள்ள தரவுகளின் அடிப்படையில், இஸ்ரேல் மீதான ஈரான் அல்லது ஹிஸ்புல்லாவின் தாக்குதல் அச்சுறுத்தல் நீடிப்பதாகவே குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |