யுரேனியம் ஈரானை விட்டு எங்கும் செல்லாது: டிரம்பிற்கு ஈரான் கொடுத்த அதிர்ச்சி
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் எப்போது விட்டு கொடுக்காது என அந்நாட்டு அறிவித்துள்ளது.
டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
சமீபத்தில் அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் திருப்பி தர ஈரான் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது மண்ணில் புதைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் அனைத்தும் அமெரிக்காவுக்கு கிடைக்கும் என டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டு இருந்தார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த டிரம்ப், அமெரிக்கா-ஈரான் இடையே நல்ல ஒப்பந்தம் ஏற்பட தற்போது நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார்.
யுரேனியத்தை விட்டுக் கொடுக்க முடியாது
இந்நிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் எப்போது விட்டு கொடுக்காது என ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி வெளியிட்ட தகவலில், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கும் மாற்றப்படாது என தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின் போது யுரேனியத்தை அமெரிக்காவுக்கு மாற்றுவது குறித்து ஒருபோதும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்பு நடந்த பேச்சுவார்த்தைகள் அணுசக்தி தொடர்புடையதாக இருந்ததாகவும், ஆனால் தற்போதைய பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இருந்ததால் அதன் வரம்புகள் இயல்பாகவே விரிவடைந்ததாக உள்ளது என்றும் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |