24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தமா? ஈரான் மறுப்பு

Shehbaz Sharif Iran-US Conflict
By Karthikraja Jun 13, 2026 02:07 PM GMT
Report

24 மணி நேரத்தில் ஈரான் அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்த நிலையில் ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம்

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.  

24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தமா? ஈரான் மறுப்பு | Iran Says Us Iran Sign Will Not Be Tomo To Sharif

6 வார காலத்திற்கு நடந்த போருக்கு பின்னர், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.

இதனையடுத்து இரு தரப்பும் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து, பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. 

24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தமா? ஈரான் மறுப்பு | Iran Says Us Iran Sign Will Not Be Tomo To Sharif

ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு வரும் வரை ஹார்மோஸ் நீரிணையை முற்றுகையிடுவோம் என டிரம்ப் அறிவித்து முற்றுகையிட்டிருந்தது.

இதனையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா வான்படை ஈரான் படகு மற்றும் தளங்களை தாக்கியதற்கு பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

ஷெபாஸ் ஷெரீஃப்

இதனால் மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சத்தில் உலக நாடுகள் இருந்த நிலையில், 24 மணி நேரத்திற்குள் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாம் முன்னெப்போதையும் விட ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு மிக அருகில் இருக்கிறோம். 

அடுத்த 24 மணி நேரத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து உடனடியாக அமைதி ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையொப்பமிடவும், அடுத்த வாரம் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் பாகிஸ்தான் தயாராகி வருகிறது. 

பேச்சுவார்த்தைகளின் போது தங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இப்பிராந்தியத்தில் உள்ள எங்கள் சகோதரர்களின் ஆதரவிற்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், நீடித்த அமைதிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நெருங்கி வந்துள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதனை தனது truth Social பதிவிட்டுள்ளார். 

 

அதேவேளையில், அமெரிக்க - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்படாது என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தமா? ஈரான் மறுப்பு | Iran Says Us Iran Sign Will Not Be Tomo To Sharif

இது குறித்து பேசிய அவர், முன்னெடுக்கப்பட்டு வரும் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம், போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறது. மேலும், இந்தக் கட்டத்தில் அணுசக்தி விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடைபெறாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சரியான நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும்; அது நாளை நடக்காது என்றாலும், வரும் நாட்களில் அது நடப்பதற்கான சாத்தியக்கூறு நிராகரிக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US