பணயத்தொகைக்காக கடத்தப்படும் இந்தியர்கள் - சலுகையை ரத்து செய்த ஈரான்
இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவை ஈரான் ரத்து செய்துள்ளது.
விசா இல்லா நுழைவு ரத்து
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, 50 க்கும் மேற்பட்ட நாடுகள் விசா இல்லாத நுழைவை அனுமதித்துள்ளது.

அதன்படி, மத்திய கிழக்கில் உள்ள இந்திய அரசுடன் நல்ல உள்ள உறவை கொண்டுள்ள ஈரானும், இந்தியர்களுக்கு விசா இல்லா நுழைவை வழங்கி வந்தது.
இதன் காரணமாக ஏராளமான இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஈரானிற்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், சாதராண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவை ரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது.
என்ன காரணம்?
வரும் நவம்பர் 22 ஆம் திகதி முதல், ஈரானிற்கு பயணமோ அல்லது ஈரான் வழியாகவோ பயணிக்க முன்கூட்டியே விசா பெற வேண்டும். விசா இல்லாமல் விமானம் ஏற முடியாது.

சமீப காலமாக விசா இல்லா நுழைவை பயன்படுத்தி, போலியான வேலைவாய்ப்பு வாக்குறுதி அல்லது ஈரான் வழியாக வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கப்பட்டு, ஈரானுக்கு வரும் இந்தியர்களை பணயத் தொகைக்காக கடத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதன் காரணமாக ஈரான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |