ரஷ்யாவிற்கு ஏவுகணைகளை விநியோகம் செய்யும் ஆசிய நாடு., ஐரோப்பிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
ரஷ்யாவிற்கு ஈரான் ஏவுகணைகளை விநியோகம் செய்துவருவது ஐரோப்பிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு ஈரான் ஆயுதங்கள் விநியோகம் செய்வதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் குற்றம்சாட்டியுள்ளன.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு ஈரான் அனுப்பி வருகிறது.
லண்டனுக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஆயுதங்களை வழங்குவது நெருக்கடியை மோசமாக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு ஈரான் செவிசாய்க்கவில்லை என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளரிடம் தெரிவித்தார்.
ஐரோப்பிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
மேலும், ஈரானிடமிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்றுள்ளதாகவும், சில வாரங்களுக்குள் அவற்றை உக்ரைனில் பயன்படுத்தக்கூடும் என்றும் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கு ஈரானுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு பரந்த ஐரோப்பிய பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்று எச்சரித்தார்.
ஈரான் தனது Fath-360 (close-range ballistic missile system) ஏவுகணை அமைப்பை பயன்படுத்த ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாக பிளிங்கன் கூறினார். இந்த ஏவுகணை இது அதிகபட்சமாக 75 மைல் (121 கி.மீ) தூரம் செல்லும்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக பிரதிநிதிகள் டிசம்பரில் ஈரானிய அதிகாரிகளுடன் ஃபாத் -360 மற்றும் மற்றொரு ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக நம்பப்படுகிறது.
முன்னதாக உக்ரேனில் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்ட Shahed ட்ரோன்களை ஈரான் வழங்கியுள்ளது, ஆனால் ரஷ்யாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்குவதை மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia received missiles from Iran, threat to European security, Russia Ukraine war, United States of America, United Kingdom