ஏமனுக்கு பறந்த விமானம்- ஹவுதிகளுக்கு ஈரான் அனுப்பிய உபகரணங்கள்., கசிந்த ரகசியங்கள்
ஈரான் ஜூலை 13-ஆம் திகதி ஹவுதி இயக்கத்திற்கு ஆதரவாக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதிகள், இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஏவுகணை, ட்ரோன் தொடர்பான உபகரணங்களை ஏமனுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விமானம் முதலில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையத்தை நோக்கிச் சென்றது. ஆனால், சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கத்தின் தாக்குதலால், ஹோடெய்தா நகரத்திற்கு மாற்றப்பட்டது.

தகவல்களின்படி, 10 முதல் 21 IRGC அதிகாரிகள், அதில் மூத்த தளபதிகளும் அடங்குவர். அவர்கள் ஹவுதி படைகளுக்கு புதிய ஏவுகணை அமைப்புகள் குறித்து பயிற்சி அளிக்கவும், நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், ஹவுதி இயக்கத்திற்கு நிதி உதவியாக தங்கமும் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை ஹவுதி படைகளின் இராணுவ திறன்களை மேம்படுத்தி, செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தப் கடல்சாலையில் சர்வதேச கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக ஏமன் தகவல்தொடர்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஹவுதி இயக்கம், “இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். விமானத்தில் இருந்தவர்கள் பொதுமக்கள் மட்டுமே” என்று மறுத்துள்ளது. ஆனால், பாதுகாப்பு ஆய்வாளர்கள், விமானத்தில் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள், ட்ரோன் பாகங்கள் இருந்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம், செங்கடல் வழியாக செல்லும் உலகளாவிய எண்ணெய் மற்றும் வர்த்தக பாதைகளுக்கு புதிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |