ஹார்முஸில் புதிய விதிகள்: அமெரிக்காவின் முற்றுகைக்கு எதிராக ஈரான் அறிவிப்பு
உலகின் முக்கியமான எரிசக்தி வர்த்தக பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் கடற்பரப்பில் புதிய விதிகளை அமுல்படுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை, “இரான் கடற்கரை 2,000 கிமீ பரப்பில் முழுமையான கட்டுப்பாட்டை மேற்கொண்டு, அந்த நீர்வழியை பிராந்திய மக்களுக்கு பாதுகாப்பும் வளமும் தரும் இடமாக மாற்றுவோம்” என தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படை முற்றுகை தொடரும் என அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெஸ்சன்ட் அறிவித்ததைத் தொடர்ந்து ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது, ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்கள், ஈரானின் வேகப் படகுகள் மூலம் தடுக்கப்பட்டு, 2 மில்லியன் டொலர் வரை கட்டணம் செலுத்தி தான் பாதுகாப்பாக கடந்து செல்ல முடிகிறது.
ஈரான், இந்த கட்டணத்தை ஓமனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், ஹார்முஸ் கடற்பரப்பு ஈரான்-ஓமன் எல்லைக்குள் உள்ளது எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு கப்பலையும் தடுக்க வேண்டும் எனக் கூறி, ஈரானிய படகுகள் மீது Shoot and Kill உத்தரவை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலை, உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. Brent Crude விலை பீப்பாய்க்கு 122 டொலர் வரை உயர்ந்துள்ளது.
ஈரான்-அமெரிக்கா இடையேயான இந்த கடற்படை முற்றுகை, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#Iran #StraitOfHormuz #USBlockade #IRGC #Trump #OilPrices #GlobalSecurity #MiddleEast