ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி ரைசி உயிரிழந்தாரா? அரசு ஊடகம் சொன்ன பகீர் தகவல்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் என உறுதிப்படுத்தபடாத தகவல் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் மோசகமாக தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உடன் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி ஆகியோரும் பயணித்ததாக கூறப்படுகிறது.
BREAKING: Iranian President Ebrahim Raisi was killed in yesterday's helicopter crash- IRINN Telegram Channel
— Hananya Naftali (@HananyaNaftali) May 20, 2024
Reports say that the helicopter hit the mountain before crashing as a result of severe weather conditions and fog.. pic.twitter.com/X07rCWTXRz
இதற்கிடையில் தற்போது ஈரான் அரசு ஊடகம், ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டர் மலை உச்சியில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்தில் "உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும்" இல்லை என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ரைசி பயணித்த ஹெலிகாப்டரை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ள நிலையில், மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து 1.25 மைல் தொலைவில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரைசி விபத்தில் உயிரிழந்தாரா?
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அரை-அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
?? | LOCALIZARON EL HELICÓPTERO
— UHN PLUS (@UHN_Plus) May 20, 2024
El jefe de la Media Luna Roja iraní declaró el lunes que el helicóptero desaparecido en el que viajaba Raisi fue encontrado.
“El helicóptero ha sido encontrado. Ahora nos dirigimos hacia el helicóptero”, declaró el jefe de la Media Luna Roja,… pic.twitter.com/igDFzATq0E
ஈரான் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் "எதிர்பார்ப்புகள் குறைவாக உள்ளன” என்றும், ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அதே சமயம் ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டர் மலை உச்சியில் விழுந்து நொறுங்கியதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |