4 அமெரிக்க வானூர்திகளை சுட்டு வீழ்த்திய ஈரான் - தோல்வியடைந்த அமெரிக்க மீட்பு முயற்சி?
2 C-130 இராணுவப் போக்குவரத்து விமானங்கள், 2 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
தோல்வியடைந்த அமெரிக்க மீட்பு முயற்சி?
2 நாட்களுக்கு முன்பு ஈரான் வான் பரப்பில் நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன F-15 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.
இதில் இருந்து கீழே விழுந்த 2 விமானிகளையும், அமெரிக்கா ராணுவம் துணிச்சலான ராணுவ நடவடிக்கை மூலம் ஈரானுக்குள் புகுந்து மீட்டதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவின் இந்த மீட்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாகவும், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம் என மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது.
Iran’s national news network: Details of the U.S. failure in the pilot rescue operation will soon be revealed, backed by undeniable images and documented evidence.
— Consulate General of the I.R. Iran in Mumbai (@IRANinMumbai) April 5, 2026
Stay tuned.#Iran #US #War #NewsUpdate #Pilot pic.twitter.com/dMteU1gPaK
வீழ்த்தப்பட்ட 4 அமெரிக்க வானூர்திகள்
இந்நிலையில், இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட 2 C-130 இராணுவப் போக்குவரத்து விமானங்கள் மற்றும் 2 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைந்த கட்டளையகமான கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
If the United States gets three more victories like this, it will be utterly ruined. 👏 pic.twitter.com/jutDghVrjz
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 5, 2026
அமெரிக்க விமானங்கள் தரையில் விழுந்து தீப்பற்றி எரியும் வீடியோக்களை ஈரான் வெளியிட்டுள்ளது.

ஆனால் மீட்பு பணியின் போது 2 C-130 இராணுவப் போக்குவரத்து விமானங்கள் சிக்கிக்கொண்டதால் எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருக்க அமெரிக்கா படையினரே அந்த விமானங்களை அழித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Footage of the exact moment an American A-10 warplane is struck by an air defense missile fired by the Iranian Army’s integrated air defense system.#Iran#WAR#AirDefense#A10 https://t.co/q8fUc3Ugar pic.twitter.com/49k5yu57aB
— Consulate General of the I.R. Iran in Mumbai (@IRANinMumbai) April 4, 2026
மேலும், நேற்று ஹார்மோஸ் நீரிணை அருகே அமெரிக்காவின் ஏ-10 ரக விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியாக ஈரான் அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |