அமெரிக்காவின் MQ-1 பிரிடேட்டர் ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்திய IRGC படை
Iran shot down U.S. MQ-1 Predator Drone Over Qeshm Island: அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ஈரான் புரட்சிகர காவல் படையினர் அறிவித்துள்ளனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் விமானம்
ஈரானின் Qeshm தீவுக்கு மேல் பறந்த அமெரிக்காவின் MQ-1 பிரிடேட்டர் (MQ-1 Predator) ரக ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் புரட்சிகர காவல் படையினர் சுட்டு வீழ்த்தி இருப்பதாக சனிக்கிழமை IRGC அறிவித்துள்ளது.
இது தொடர்பாக IRGC வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், தங்கள் ராணுவத்தின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சற்று நேரத்திற்கு முன்பு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஈரான் ராணுவத்தின் கூற்றுப்படி, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் அமெரிக்காவின் 19வது MQ-1 ரக ஆளில்லா விமானம் ஆகும்.
இதற்கு முன்னதாக சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்காவின் அதி நவீன MQ-9 ரக ஆளில்லா விமானம் ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புரட்சிகர காவல் படை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதை இந்த நடவடிக்கைகள் மேலும் உறுதிப்படுத்துகிறது