ஈரானிய தூதரக அதிகாரிகளை பிரான்ஸ் வெளியேற்றும் விவகாரம்: ஈரான் கடும் விமர்சனம்
Iran calls France's decision to expel two Iranian diplomats illegal: ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பிரான்சின் முடிவு சட்டவிரோதமானது என ஈரான் விமர்சித்துள்ளது.
ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை பிரான்ஸ் வெளியேற்ற இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஈரானிய தூதரக அதிகாரிகள் இருவரை வெளியேற்றும் பிரான்ஸ்
ஜூலை மாதம் 19ஆம் திகதி, ஈரான் அதிகாரிகள், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இருவரை கைது செய்து காவலில் அடைத்து விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.
அப்போது, அவர்களில் ஒருவரை ஈரான் அதிகாரிகள் தாக்கியதாகவும் தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்துதான், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட், ஈரான் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளார்கள் என்று கூறியிருந்தார்.
ஈரான் கடும் விமர்சனம் பிரான்சின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பிரான்சின் முடிவு சட்டவிரோதமானது என ஈரான் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Esmaeil Baqaei, ஈரான் சட்டப்படி எடுத்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகளுக்கு, பிரான்சின் முடிவு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |