ஈரானிய உளவாளியின் தகவல்... சொல்லி அடித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லா தலைவர் கொலையின் பின்னணி
ஈரானிய உளவாளி ரகசியமாக அளித்த தகவலை அடுத்தே, ஹிஸ்புல்லா தலைவர் இருக்கும் இடைத்தை இஸ்ரேல் குறிவைத்து தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானிய உளவாளி
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா படைகளின் கட்டளை மையத்தில் ஹஸன் நஸ்ரல்லா கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார் என்பதை ஈரானிய உளவாளி இஸ்ரேல் தரப்புக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் ஹிஸ்புல்லா முன்னணி தலைவர்கள் பலர் கலந்துகொள்ள இருப்பதையும் அந்த உளவாளி இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார். லெபனான் நேரப்படி பகல் 11 மணியளவில் இஸ்ரேல் ராணுவம் தங்கள் சமூக ஊடக பக்கத்தில்,
நஸ்ரல்லா இனி ஒருபோதும் உலக நாடுகளை அச்சுறுத்தப் போவதில்லை என பதிவிட்டிருந்தது. அதன் பின்னரே, ஹிஸ்புல்லா அமைப்பு நஸ்ரல்லா கொல்லப்பட்டதை உறுதி செய்தது.
ஹிஸ்புல்லா படைகளுக்கு சுமார் 30 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார் நஸ்ரல்லா. 2006ல் ஹிஸ்புல்லா படைகளுடனான போருக்கு பின்னர் இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா தலைவர்களின் நகர்வுகளை கண்காணிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் முன்னெடுத்தது.
எச்சரித்த நஸ்ரல்லா
2006ல் சுமார் 34 நாட்கள் நீண்ட போரில் வெற்றியை பதிவு செய்ய இஸ்ரேல் தவறியது. பெரும் இழப்புகளை சந்தித்தபோதும் ஹிஸ்புல்லா மீண்டு வந்தது. ஆனால் அதன் பின்னர் ஹிஸ்புல்லா படைகளின் மொத்த நகர்வுகளையும் இஸ்ரேல் கண்காணித்து வந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இதன் ஒருபகுதியாகவே பேஜர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதும், அதில் இரண்டே நாட்களில் 37 பேர்கள் கொல்லப்பட்டதுடன் 3,000 பேர்கள் காயங்களுடன் தப்பினர்.
இதனையடுத்து இஸ்ரேலை எச்சரித்த நஸ்ரல்லா, எங்கே எதிர்பார்க்கிறதோ, அங்கு நடக்காத இடத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.
ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்திலும் ஈரானிய உளவாளிகளை இஸ்ரேல் விலைக்கு வாங்கியிருந்தது. தர்போது ஹிஸ்புல்லா தலைவர் கொலையிலும் ஈராணிய உளவாளியே தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |