எங்கள் இளைஞர்களின் ரத்தம் உங்கள் விரல்களில்..அரசு ஊடகத்தை ஹேக் செய்த போராட்டக்காரர்கள்..வைரலாகும் வீடியோ
அத்துடன் பல உரிமைக் குழுக்களும், பயனர்களும் ஹேக் செய்யப்பட்ட காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்
ஹேக்கிங் செய்தபோது திரையில் பெரிய மீசை, தாடி மற்றும் புருவங்களுடன் கூடிய கருப்பு வண்ண முகமூடி அணிந்த கார்ட்டூன் வரைபட தோற்றம் காட்டப்பட்டது
ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராக எழுந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
போராட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 154 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்லாமிய குடியரசின் நியூஸ் நெட்வொர்க் சார்பிலான தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பின்போது, அந்த ஊடகம் ஹேக் செய்யப்பட்டது. எழுந்து வாருங்கள், எங்களுடன் சேருங்கள் என்ற வாசகம் காட்டப்பட்டது.
BREAKING: Islamic Republic’s state-owned TV network hacked during a Khamenei address and the message: “The blood of our youth is dripping from your fingers.” Another message displayed: Rise up and Join Us.#مهسا_امینی#MahsaAmini pic.twitter.com/GliPMHUgJo
— Masih Alinejad ?️ (@AlinejadMasih) October 8, 2022
மேலும், 'எங்கள் இளைஞர்களின் ரத்தம் உங்கள் விரல்களில் இருந்து கொட்டுகிறது' என்ற வாசகமும், 'பாஸ்டர் தெருவில் இருந்து உங்கள் பொருட்களை சேகரித்துக் கொண்டு, ஈரானுக்கு வெளியே உங்கள் குடும்பத்திற்கு வேறொரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய நேரம் இது' என்ற வாசகமும் தோன்றியது. இதனால் சில நிமிடங்கள் வரை நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டது.