டிரம்பின் இளைய மகன் உயிருக்கு 10 மில்லியன் டொலர் பரிசு: ஈரான் வெளியிட்ட சர்ச்சை வீடியோ
Iran state tv airs murder threat to trump’s son, offers $10mn reward: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இளைய மகன் பாரன் டிரம்ப் குறித்து ஈரானிய ஊடகம் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையாக மாறியுள்ளது.
பாரன் டிரம்ப் குறித்து வெளியான 3 நிமிட வீடியோ
ஈரானிய அரசு ஊடகம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இளைய மகனான பாரன் டிரம்ப்(Barron Trump) தொடர்பான 3 நிமிட சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிப்பரப்பியது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் இன்டர்நேனஷல் வெளியிட்ட தகவலின்படி, அந்த வீடியோவில் டிரம்பின் இளைய மகனான பாரன் டிரம்ப் உயிருக்கு 10 மில்லியன் டொலர் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
President Trump,
— Niyak Ghorbani (نیاک) (@GhorbaniiNiyak) August 24, 2026
Islamic Republic’s state-run Channel 3 has now openly broadcast a video targeting your son, Barron Trump, discussing ways to reach him and promoting a reported $10 million bounty.
This isn’t some anonymous account on social media. This was broadcast on the… https://t.co/DPzwLnARO2 pic.twitter.com/KfWN0xLsci
அத்துடன் அந்த வீடியோவில் பாரன் டிரம்பை உளவு பார்த்தல், அவரின் ஆன்லைன் செயல்பாடுகள் மற்றும் அவரது ரகசிய பாதுகாப்பு சேவைகளை எவ்வாறு தாண்டிச் செல்வது என்ற வழிகள் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின் உண்மை தன்மை மற்றும் அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் எதுவும் சரிபார்க்க முடியவில்லை.
அமெரிக்க ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களை அரசு ஊடகங்கள் குறிவைப்பது என்பது வழக்கத்திற்கு மாறான தீவிர போக்காக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |