இஸ்ரேல் அணு நிலையங்களை குறிவைத்து பாய்ந்த ஏவுகணைகள்., ஈரானின் பதிலடி தாக்குதல்
ஈரானின் Natanz அணு நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேலின் இரண்டு அணு நிலையங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
போரின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், சனிக்கிழமை இரவு இஸ்ரேலின் டிமோனா (Dimona) மற்றும் அராட் (Arad) ஆகிய நகரங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் டிமோனாவில் உள்ள Peres Negev அணு ஆராய்ச்சி மையம் ஈரானின் முக்கிய குறியாக இருந்தது.
இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அராட் நகரத்தில் 84 பேர் காயமடைந்ததாகவும், அதில் 10 பேர் தீவிர நிலையில் உள்ளதாகவும், டிமோனாவில் 33 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளை தாக்கியதால் கட்டிடங்கள் சேதமடைந்தன, தரையில் பெரிய குழிகள் உருவாகியுள்ளன.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டாலும், ஏவுகணைகளை தடுக்க முடியவில்லை என்று அதிகரைகள் தெரிவித்துள்ளனர். இதனால் நேரடி தாக்குதல்கள் ஏற்பட்டன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இது மிகவும் கடினமான இரவு. மீட்பு மற்றும் அவசர சேவை படைகளை வலுப்படுத்துவோம். எதிரிகளை எல்லா தளங்களிலும் தாக்குவோம்" என்று உறுதியளித்துள்ளார்.
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF)" தற்போது ஈரானின் பயங்கரவாத ஆட்சி இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகிரோம்" என அறிவித்துள்ளன.
இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தி, உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையை சிக்கலாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |