ஈரான் மீது தாக்குதல்... அமெரிக்காவில் FBI வெளியிட்டுள்ள அதிர்ச்சி எச்சரிக்கை
ஈரான் தனது பயங்கரவாத அமைப்புகள் ஊடாக அமெரிக்காவைத் தாக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதாக, FBI அமெரிக்க மக்களுக்கு ஒரு பயங்கரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதி எச்சரிக்கை நிலை
அமெரிக்கா முழுவதும் FBI பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு தடுப்பு குழுக்கள் அதி எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக முகமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான டொனால்ட் ட்ரம்பின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பயங்கரவாத அச்சங்கள் அதிகரித்துள்ளன. மட்டுமின்றி, ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ள நிலையிலேயே FBI இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களை நடத்த ஈரான் உலகெங்கிலும் உள்ள போராளிக் குழுக்களின் அமைப்புகளைப் பயன்படுத்தி வருகிறது. தற்போது விடுக்கப்பட்டுள்ள பயங்கரவாத எச்சரிக்கை எவ்வளவு காலம் அமுலில் இருக்கும் என்பதை FBI தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், தாய்நாட்டிற்கு ஏற்படக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தல்களையும் நாம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து முறியடித்து வருவதால், உள்நாட்டுப் பாதுகாப்பு நமது ஃபெடரல் உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க கூட்டாளர்களுடன் நேரடி ஒருங்கிணைப்பில் உள்ளது என்று கிறிஸ்டி நோயம் கூறினார்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், அமெரிக்க இராணுவம் இஸ்ரேலுடன் கூட்டு நடவடிக்கையில் ஈரான் மீது Tomahawk ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தி ஈரான் இந்த ஆக்கிரமிப்புக்கு பதிலளித்தது.
மட்டுமின்றி, மத்திய கிழக்கில் குடியிருப்பு வளாகங்கள் மற்றும் விமான நிலையங்களைத் தாக்க ஈரான் Kamikaze ட்ரோன்களையும் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் பின்னடைவு
ஈரான் மீதான இந்த இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்படலாம் என ட்ரம்ப் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். மட்டுமின்றி, அமெரிக்காவில் செயல்படும் பயங்கரவாதிகளுடன் இணைந்து தாக்குதல்களை முன்னெடுத்து ஈரான் பதிலளிக்கக்கூடும் என்றும் ட்ரம்பை அவரது உயர் இராணுவ ஆலோசகர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
ஈரானைத் தாக்கத் திட்டமிடும் போது, அமெரிக்க உயிரிழப்புகள் குறைவாகவே இருக்கும் என்று அவரது தளபதிகளால் உறுதியளிக்க முடியாததால், ட்ரம்ப் விரக்தியில் காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், போரல்ல அமெரிக்காவின் வளர்ச்சியே முதன்மையான இலக்கு என பரப்புரை செய்து ஆட்சிக்கு வந்த டொனால்ட் ட்ரம்ப், தற்போது மத்திய கிழக்கில் அமெரிக்காவை ஒரு புதிய போருக்குள் இழுத்து விட்டதற்காக கடுமையான அரசியல் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
மட்டுமின்றி, மத்திய கிழக்கில் எந்தவொரு ஆட்சி மாற்றப் போர்களுக்கும் எதிராக வாதிடும் பிரச்சாரத்துடன் ட்ரம்ப் 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஆனால், தற்போது இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை அவர் தாக்கியுள்ளார். ஈரானில் மட்டும் 200 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |