ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை... இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்ட ஈரானின் உச்ச தலைவர்
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பாதுகாப்பு காரணங்களால் ஈரானின் உச்ச தலைவரும் இடம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உச்ச தலைவர் Ayatollah Ali Khamenei
ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளின் முதன்மை தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ் வெள்ளிக்கிழமை தெற்கு பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். நஸ்ரல்லா உடன் தளபதிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தில் உடனடியாக கருத்து தெரிவித்துள்ள ஈரானின் உச்ச தலைவர் Ayatollah Ali Khamenei, இஸ்ரேல் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
மேலும், பதிலடி உறுதி என தெரிவித்துள்ள அவர், ஹிஸ்புல்லா தலைவர்களையும், வேறு பல அமைப்புகளையும் தொடர்புகொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
பாதுகாப்பான இடத்திற்கு
இதனிடையே, எந்த நாடு மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற கட்டத்தில், மேற்கத்திய நாடுகளால் எதுவும் செய்ய முடியாத, பீதியை ஏற்படுத்தும் மிக மோசமான சூழல் மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் நிலையில், ஈரானின் உச்ச தலைவரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே ஹமாஸ் தலைவர் படுகொலை, தற்போது ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை என நெருக்கடியான சூழலில் ஈரான் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |