ட்ரம்ப் மனைவிக்கு கொலை மிரட்டல்... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோ
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் மனைவி மெலானியாவுக்கு ஈரான் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ட்ரம்ப் மனைவிக்கு கொலை மிரட்டல்...
ஈரான் ஊடகங்களில், ‘எங்கே வைத்து மெலானியாவை கொலை செய்யலாம்’ என்னும் தலைப்புடன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் பேசுபவர், மெலானியா ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்றும், ஆகவே, அவர் ஆடைகள் வாங்கச் செல்லும் இடங்களில் வைத்து அவரைக் கொல்லலாம் என்னும் ரீதியிலும் பேசுகிறார்.
ட்ரம்புக்கு ஈரான் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருவது புதிதல்ல. என்றாலும், இம்முறை, மெலானியா எங்கெங்கு ஆடைகள் வாங்கச் செல்வார், அவரது உதவியாளர்கள் யார் யார் என்பது போன்ற தெளிவான விளக்கங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த வீடியோ அச்சத்தை உருவாக்கியுள்ளது.

அதாவது, மெலானியாவின் உதவியாளர்கள் மூலம் அவர் இருக்கும் இடம் குறித்து அறிந்துகொண்டு, அவர் ஆடை வாங்கும் இடத்தில், அவருக்கு விருப்பமான நிறுவன ஆடைகளில் நச்சை தெளித்து கொல்லலாம் என்னும் அளவுக்கு அந்த வீடியோவில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கடைசியாக, ட்ரம்ப் மெலானியா தம்பதியரின் மகனான பேரன் ட்ரம்புக்கு ஒரு செய்தியை சொல்வதுடன் வீடியோ முடிவடைகிறது.
’பேரன் ட்ரம்ப், இது துவக்கம்தான், எங்களுக்காக காத்திரு’ என்கிறது அந்த செய்தி!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |