ஹார்முஸ் முடக்கம் - இணைய இணைப்பை எவ்வாறு பாதிக்கும்?
ஹார்முஸ் முடக்கம் காரணமாக இணைய இணைப்பும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஹார்முஸ் முடக்கம்
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரில் ஹார்மோஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது.
உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து இந்த பாதை வழியே நடைபெறுவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததோடு, உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த நீரிணை வழியாக எரிபொருள் விநியோகம் மட்டும் நடைபெறுவதில்லை. மாறாக உ டிஜிட்டல் உலகிற்கு முக்கிய ஆதாரமான கடலடி கேபிள்களும் இந்த பாதை வழியே செல்கிறது.
ஐக்கிய நாடுகளின் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு நிறுவனமான ITU-வின் கூற்றுப்படி, கடலடி கேபிள்கள் என்பவை உலகின் இணையப் போக்குவரத்தில் சுமார் 99 சதவீதத்தைக் கொண்டு செல்கின்றன.
கடலடி கேபிள்கள்
சமீபத்தில், இந்த கேபிள்கள் தற்செயலான அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் செயல்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை, பல முக்கிய கேபிள்களுக்கு ஒரே நேரத்தில் சேதம் ஏற்பட்டால் அது பாரசீக வளைகுடா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஈரானின் IRGC எச்சரித்துள்ளது.

சேதமடைந்த கேபிள்கள் இணைய வேகம் குறைதல் அல்லது செயலிழப்புகள், மின்வணிக இடையூறுகள், தாமதமான நிதிப் பரிவர்த்தனைகள் ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் முக்கிய கேபிள்களில், தென்கிழக்கு ஆசியாவை எகிப்து வழியாக ஐரோப்பாவுடன் இணைக்கும் ஆசியா - ஆப்பிரிக்கா - ஐரோப்பா 1 (AAE-1) கேபிள் அடங்கும்.
மேலும், இந்தியா மற்றும் இலங்கையை வளைகுடா நாடுகள், சூடான் மற்றும் எகிப்துடன் இணைக்கும் ஃபால்கன் நெட்வொர்க், கல்ஃப் பிரிட்ஜ் சர்வதேச கேபிள் அமைப்பு ஆகியவையும் உள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா, தங்கள் பொருளாதாரங்களை எண்ணெய் சார்ந்த நிலையிலிருந்து மாற்றி செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்து வருகின்றன.
மீன்பிடித்தல் மற்றும் கப்பல் நங்கூரங்கள் போன்ற சம்பவங்களால் ஆண்டுக்கு சுமார் 150–200 பழுதுகள் ஏற்படுகின்றன.
இந்த சூழலில் கேபிள்களில் பாதிப்பு ஏற்பட்டால், போர் மற்றும் கண்ணி வெடிகளின் இருப்பு காரணமாக கப்பல்கள் பழுது நீக்க செல்வதும் சிக்கலான விடயமாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |