மீண்டும் தாக்க முடியும்... மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்களுக்கு மிரட்டல் விடுத்த ஈரான்
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீண்டும் தாக்கப்படலாம் என ஈரானின் உயர் தலைவர் புதிதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
எங்களால் தாக்க முடியும்
அப்படியான ஒரு முடிவுக்கு ஈரான் எட்டும் என்றால், தாக்குதல் உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அல் உதெய்த் விமானப்படை தளத்தைத் தாக்கியது ஒரு சிறிய சம்பவம் அல்ல, ஆனால் மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய ஒரு பெரிய சம்பவம் அது என ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க தளத்தின் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலைப் பற்றி காமெனி குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள முக்கியமான அமெரிக்க தளங்களை எங்களால் தாக்க முடியும் என்று காமெனி குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை, பென்டகன் தெரிவிக்கையில், ஈரானின் ஏவுகணைகளில் ஒன்று தளத்தைத் தாக்கியது உண்மை என குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி சேதங்கள் குறித்தும் படங்கள் வெளியிடப்பட்டன. ஈரானிய தாக்குதலுக்குப் பிறகு, கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் வழியாக ஏதோ ஒன்று ஊடுருவியிருப்பதை அமெரிக்கா அறிந்திருப்பதாகக் கூறினார். ஆனால் தாக்குதலை முறியடிக்க உழைத்த அமெரிக்க துருப்புக்களை அவர் பாராட்டவும் செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |