முடக்கப்படும் பாப்-எல்-மண்டேப் நீரிணை - ஈரானின் அடுத்த அடி
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் போர் குறித்து பத்திரிகையாளர் சுபியன் பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையே 6 வாரமாக நடைபெற்று வந்த போர், 2 வார தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டியுள்ளது.

ஈரானின் ஆதரவு அமைப்பான லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், போர் நிறுத்தம் லெபனானிற்கு இல்லை எனக்கூறி லெபனானில் பாரிய தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல்.
தற்போது, லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் சூழல் நிலவி வருகிறது.
ஹார்மோஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களை அமெரிக்கா தடுத்தால், பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடல் ஆகிய பகுதிகளில் எந்தவொரு ஏற்றுமதி அல்லது இறக்குமதியும் தொடர ஈரான் எச்சரித்துள்ளது.
லெபனானை முழுவதுமாக ஆக்கிரமிக்க துடிக்கும் இஸ்ரேலின் பின்னணியில் உள்ள தோரா வேதம், ஹார்மோஸ் நீரிணையை முற்றுகையிட்ட அமெரிக்க போர் கப்பல்கள் சீனாவிற்கு செல்லும் கப்பல்களை தடுத்தால் சீனா என்ன எதிர்வினையாற்றும், இந்த போரில் ரஷ்யாவின் தலையீடு, ஈரானை தாக்குவதன் பின்னணியில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உள்ள வேறு காரணங்கள் குறித்த பல்வேறு தகவல்களை பத்திரிகையாளர் சுபியன் பகிர்ந்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு விடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |