ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த போராட்டம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்ட ஈரான்

Iran
By Arbin Feb 13, 2026 09:57 AM GMT
Report

விலைவாசி உயர்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த போராட்டமாக வெடித்ததன் பின்னணி குறித்து விசாரிக்க ஈரான் அரசாங்கம் ஆணையம் ஒன்றை அறிவித்துள்ளது.

உண்மை கண்டறியும்

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆவணங்களைச் சேகரித்து அறிக்கைகளைக் கேட்டு வருகிறது என ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபதேமே மொஹஜெரானி உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த போராட்டம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்ட ஈரான் | Iran To Investigate Deadly Protests

ஆனால், போராட்டங்களைத் தூண்டிய பொருளாதாரக் கோரிக்கைகளில் மட்டுமே ஆணையம் கவனம் செலுத்துமா அல்லது போராட்டங்களின் போது ஏற்பட்ட இறப்புகளையும் விசாரிக்குமா என்பதை செய்தித் தொடர்பாளர் குறிப்பிடவில்லை.

விசாரணை முடிந்ததும், இறுதி அறிக்கை பொதுமக்களின் தகவலுக்காகவும், மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

எப்ஸ்டீனின் விமானத்தில் பயணம்... இளம் பெண்ணுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ

எப்ஸ்டீனின் விமானத்தில் பயணம்... இளம் பெண்ணுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ

வியாழக்கிழமை, அரசாங்க வலைத்தளம் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியனின் கருத்துக்களை வெளியிட்டிருந்தது. அதில் கலவரத்திற்கான காரணங்களை விசாரிக்க நாங்கள் குழுக்களை நியமித்துள்ளோம் என குறிப்பிடப்படிருந்ததுடன், மேலதிக விவரங்களை வழங்கவில்லை.

டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், ஜனவரி 8 ஆம் திகதி தீவிரமடைந்து, இதில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் உட்பட 3,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரிவிக்கிறது.

ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த போராட்டம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்ட ஈரான் | Iran To Investigate Deadly Protests

வெட்கப்படுகிறோம்

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் படையினர் அல்லது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்காக வேலை செய்யும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பார்வையாளர்கள் என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், ஈரானுக்கு வெளியே உள்ள மனித உரிமைகள் ஆர்வலர்கள், பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை குறிவைத்து தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த போராட்டம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்ட ஈரான் | Iran To Investigate Deadly Protests

அமெரிக்காவை சேர்ந்த HRANA அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், போராட்டங்களின் உச்சக்கட்டத்தின் போது குறைந்தது 7,005 பேர் கொல்லப்பட்டனர் என்றே குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இப்படியான ஒரு சம்பவம் ஈரானில் நடந்துள்ளதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம் என ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் பதிவு செய்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US