ஈரானுக்கு துரோகம் செய்த உயர்மட்ட ராணுவ தளபதி: இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு பின்னணி
ஈரான் மீது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள துல்லியமான தாக்குதல்களுக்கு பின்னணியில், ஒரு உயர்மட்ட ராணுவ தளபதி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உயர்மட்ட தலைவர்களுடன்
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானுக்கு துரோகம் செய்யும் அந்த நபர் 67 வயதான பிரிகேடியர் ஜெனரல் இஸ்மாயில் கானி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஈரானில் கொண்டாடப்படும் தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் உயர்மட்ட பொறுப்புக்கு வந்தவர் இஸ்மாயில் கானி.
ஆனால் அக்டோபர் 4ம் திகதி பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் இஸ்மாயில் கானி தொடர்பில் தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது. சம்பவத்தின் போது ஹிஸ்புல்லா படைகளின் உயர்மட்ட தலைவர்களுடன் சந்திப்பில் இருந்தார் என்றே கூறப்படுகிறது.
ஆனால் தற்போது வெளியான தகவலில், இஸ்ரேலின் உளவாளி என்பது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், கானி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வருவதாகவே கூறப்படுகிறது.
இருப்பினும், ஹிஸ்புல்லா படைகளின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டிய Hashem Saffeieddine என்பவருடன் தளபதி கானியும் கடந்த வாரம் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால் லெபனான், ஈராக் மற்றும் ஈரான் நாடுகளின் உளவு அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேல் தாக்குதலின் போது ஹிஸ்புல்லா தலைவர்களுடன் தளபதி கானி சந்திப்பில் இல்லை என்றே கூறப்படுகிறது.
அந்த துரோகி யார்
அத்துடன், ஒரு வாரம் முன்னர் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட போதே தளபதி கானி மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி கானி மாயமாகியுள்ளது தற்போது ஈரான் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த துரோகியா தளபதி கானி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஈரானின் Quds படைகளின் தளபதியாக செயல்பட்டவர் கானி. செப்டம்பர் 27ம் திகதி ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தளபதி கானி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றே ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஸ்ரல்லா படுகொலையை அடுத்து, ஈரானுக்கு எதிராக செயல்படும் அந்த துரோகி யார் என்ற விசாரணை முடுக்கிவிடப்பட, தங்கள் தளபதியே அந்த துரோகி என்பது ரகசிய விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து கானியும் அவரது குழுவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணையை எதிர்கொள்வதாக தகவல் கசிந்துள்ளது. 2020 ஜனவரி முதல் Quds படைகளின் தலைவராக தளபதி கானி செயல்பட்டு வருகிறார்.
தற்போது உயர்மட்ட தளபதிகள் பலர் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யபப்ட்டுள்ள நிலையில் கானி மீதான சந்தேகம் வலுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |