Starlink இணைய சேவையைப் பயன்படுத்திய நபரை சித்திரவதை செய்து கொன்ற ஈரான்
ஈரானில் இணைய சேவை முடக்கத்தின் போது Starlink பயன்படுத்திய நபர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தை பயன்படுத்தியதாக
இணையத்தைப் பயன்படுத்திய பெரும் குற்றத்திற்காக ஒரு தந்தையை ஈரானிய நிர்வாகம் சித்திரவதை செய்து கொன்றதுடன், போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக 21 வயது கராத்தே வீரர் ஒருவரைத் துன்புறுத்தி மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயது ஹெசம் அலாதீன், இணையத்தை அணுக ஸ்டார்லிங்கைப் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்.
ஸ்டார்லிங்க் சேவை மூலம் இணையத்தை பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, கடந்த இரண்டு வாரங்களுக்குள் அலாதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரானின் காவல்துறையினர் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, ஸ்டார்லிங்க் கருவியைக் கண்டெடுத்து, அவரது குடும்பத்தினர் முன்னிலையிலேயே அவரை அடித்துக்கொன்றுள்ளனர்.
மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக
அலாவுதீனின் உடல் பின்னர் கைப்பற்றப்பட்டது என்றும், நடந்த சம்பவம் குறித்துப் பேசப்போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளும் வரை அந்த உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இறுதியாக, புதன்கிழமையன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்; ஆனால், பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியிலேயே அது நடைபெற்றது. ஈரானிய நிர்வாகம், தனது மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய இணைய முடக்கங்களை ஒரு ஆயுதமாகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறது.
ஆனால், போர் மூண்ட பிறகு நாட்டைத் தாக்கிவரும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளச் தலைவர்கள் திணறிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை மிகவும் கொடுமையான ஒன்றாக அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |