எதிரிகள் குலைநடுங்க... அமெரிக்க - இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் புதிய ஆயுதம்

Donald Trump Iran Israel-Iran conflict
By Arbin Apr 30, 2026 03:06 AM GMT
Report

அமெரிக்க - இஸ்ரேலியப் படைகளுக்கு எதிரான போரில், எதிரிகள் பெரிதும் அஞ்சக்கூடியதும், அவர்களுக்கு மாரடைப்பையே ஏற்படுத்தக்கூடியதுமான ஒரு புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

புதிய ஆயுதம் ஒன்றை

அமெரிக்க முற்றுகையை நீக்குவதற்கு ஈடாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கலாம் என்ற ஈரானின் நிபந்தனையை அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிரிகள் குலைநடுங்க... அமெரிக்க - இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் புதிய ஆயுதம் | Iran Touts New Weapon Against

ஆனால் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் வரையில் ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க கடற்படை முற்றுகையைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே எதிரிகள் குலைநடுங்கும் வகையில் புதிய ஆயுதம் ஒன்றை மிக விரைவில் ஈரான் களமிறக்க இருப்பதாக அந்த நாட்டின் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாஹ்ராம் இரானி தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஆயுதம் அவர்களின் அருகிலேயே உள்ளது. இதனால் எதிரிகளுக்கு மாரடைப்பு ஏற்படாது என நம்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடுக்கடலில் ஆயுதமேந்திய கொள்ளை... அமெரிக்காவை கடுமையாக சாடிய ஈரான்

நடுக்கடலில் ஆயுதமேந்திய கொள்ளை... அமெரிக்காவை கடுமையாக சாடிய ஈரான்

மட்டுமின்றி, ஹார்முஸ் வழியாக நடைபெறும் ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தைத் தடுப்பதன் மூலம் பொருளாதார அழுத்தத்தைப் பயன்படுத்தி, ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தியையும் அவர் கேலி செய்தார்.

எதிரிகளின் அந்த அனுமானமே தற்போது இராணுவக் கல்விக்கூடங்களில் கேலிக்கூத்தாக மாறிவிட்டது என்றார். இதனிடையே, எதிரிகள் பயத்தில் அலறுவார்கள் என பெருமை பேசப்பட்ட அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கனுக்கு எதிராக ஈரானியப் படைகள் குறைந்தது ஏழு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இரானி கூறியுள்ளார்.

எதிரிகள் குலைநடுங்க... அமெரிக்க - இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் புதிய ஆயுதம் | Iran Touts New Weapon Against

இரானியின் கருத்தின் அடிப்படையில், தொடர்புடையத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த விமானம் தாங்கி கப்பலிலிருந்து அமெரிக்காவை விமானங்களை ஏவவோ அல்லது வான்வழி நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​விடாமல் தடுத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

பழிவாங்குவோம் என சபதம்

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய பின்னர், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய முக்கிய இலக்குகள் மீது ஈரானியப் படைகள் குறைந்தது 100 கட்டங்களாக வெற்றிகரமான பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

எதிரிகள் குலைநடுங்க... அமெரிக்க - இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் புதிய ஆயுதம் | Iran Touts New Weapon Against

இதன் அடுத்த கட்டமாக, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பிக்க வைத்ததும் அமெரிக்க - இஸ்ரேல் தரப்புக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அழுத்தம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட ஈரானிய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

எதிரிகள் குலைநடுங்க... அமெரிக்க - இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் புதிய ஆயுதம் | Iran Touts New Weapon Against

இதனையடுத்தே அமெரிக்கப் படைகள் அப்பிராந்தியத்தில் ஈரானியக் கப்பல்களையும் துறைமுகங்களையும் முற்றுகையிட்டன. ஆனால், இன்னும் எதிரிகள் அப்பிராந்தியத்தில் நெருங்கினால், நாங்கள் தாமதமின்றிச் செயல்முறை நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தளபதி ரியர் அட்மிரல் ஷாஹ்ராம் இரானி தெரிவித்துள்ளார்.

மேலும், போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்காக தங்கள் இரத்தத்தின் கடைசி சொட்டு வரை பழிவாங்குவோம் என்றும் அவர் சபதம் செய்தார். எதிரிகள் வருந்தும்படியான ஒரு அடியை நாங்கள் அவர்களுக்குக் கொடுப்போம் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US