ஈரான் போர் ஒப்பந்தம் தொடர 1% மட்டுமே வாய்ப்பு: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம்
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அந்த ஒப்பந்தம் எந்த நேரத்திலும் முறியக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஓவல் அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டொனால்ட் டிரம்ப், ஒப்பந்தத்தின் கவலைக்கிடமான நிலையை மருத்துவ உதாரணங்களுடன் விளக்கினார்.

அதில் ஈரானுடனான அமைதி போர் ஒப்பந்தமானது, மருத்துவர் வந்து உங்கள் அன்பிற்குரியவர் உயிர் பிழைப்பதற்கு 1% வாய்ப்பு மட்டுமே இருப்பதாக கூறுவதை போன்ற நிலையில் இருப்பதாக கூறினார்.
கடந்த மாதம் டிரம்ப் அறிவித்த இந்த போர் நிறுத்தம், சில வாரங்களாக கடுமையான அழுத்தத்தை சந்தித்து வருகிறது. பிராந்திய ரிதீயான பதற்றத்தை தணிப்பதற்காக இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இரு நாடுகளும் கடந்த சில நாட்களாக இராணுவ மோதலில் ஈடுபட்டு வருவதால் போர் நிறுத்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |