ஈரான் நகரத்தை அழித்து விடுவோம்! டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை: கொல்லப்பட்ட IRGC தளபதி?
ஈரான் போரில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய படைகளின் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இதுவரை நடத்திய போர் தாக்குதலில் கிட்டத்தட்ட 1,937 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஈரானிய சுகாதாரத்துறை துணை அமைச்சர் அலி ஜஃபாரியன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த இராணுவ நடவடிக்கையில் சுமார் 24,800 பேர் காயமடைந்து இருப்பதாக அதில் 4000 பேர் பெண்கள் என்றும் 1,621 பேர் குழந்தைகள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் கடற்படை தளபதி உயிரிழப்பு
இஸ்ரேல் சமீபத்தில் வெளியிட்ட தகவலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை தளபதி அலிசரேசா டாங்சிரி கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி இடைமறிப்புக்கும், ஜலசந்தியில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதில் கொல்லப்பட்ட கடற்படை தளபதி அலிசரேசா டாங்சிரி நேரடி பொறுப்பு உண்டு என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.
ஈரானை அழித்துவிடுவோம்
அதே நேரத்தில், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலை முடிவுக்கு கொண்டு வர ஈரான் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் அந்நாட்டின் நகரங்களை அழித்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |