அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம்
அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை வழங்கும் முயற்சியாக அமெரிக்கா மற்றும் ஈரான் தங்களது மோதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
அமெரிக்கா - ஈரான் தாக்குதல் நிறுத்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக ஈரான் மீதான வான்வழித் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Fox நியூஸ் தொலைக்காட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் அளித்த பேட்டியில், இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்த நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பேச்சுவார்த்தைக்கான இடத்தையும் அவகாசத்தையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்தம் தீர்வல்ல என்றும், ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய மேஜையில் அனைத்து விதமான சாத்தியக்கூறுகளும் வைத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
அதே நேரம் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு தளவாடங்களின் கையிருப்பு குறைந்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, பிராந்தியத்தில் தற்காப்புத் தாக்குதல்களை இடைக்காலமாக நிறுத்தி வைத்து இருப்பதாக ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |