சமோசா முதல் நூடுல்ஸ் வரை... ஈரான் போர் உணவுப்பொருட்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம்

Indonesia South Korea
By Balamanuvelan Jul 29, 2026 11:45 AM GMT
Report

உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு.

இந்நிலையில், ஈரான் போரால் சமோசா முதல் நூடுல்ஸ் வரையிலான அன்றாடகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது என்னும் கவலையை உருவாக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சமோசா முதல் நூடுல்ஸ் வரை...

முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே செல்லும் ஈரான் போரால், இந்தியாவில் சமோசா, தென்கொரியாவில் நூடுல்ஸ், இந்தோனேசியாவில் தெரு உணவுகள் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.

சமோசா முதல் நூடுல்ஸ் வரை... ஈரான் போர் உணவுப்பொருட்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் | Iran War Affects Samosa Noodles Price

அதாவது, மக்களைப் பொருத்தவரை, இப்படிப்பட்ட ஒரு நிலையில், குறைந்த செலவில் உணவை முடித்துக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். அதனால், வியாபாரிகளுக்கு வருவாய் குறைகிறது.

குறிப்பாக, இந்த விடயம், மக்கள் அன்றாடம் வாங்கும் உணவுப்பொருட்கள் விடயத்தில் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

அவை ஆடம்பரப் பொருட்களோ, அல்லது, மக்கள் எப்போதாவது குடும்பத்துடன் சென்று உண்ணும் ஆடம்பர ஹொட்டலில் கிடைக்கும் உணவுப்பொருட்களோ அல்ல! அவை, விலை மலிவான, அன்றாடக உணவுகள். 

சமோசா முதல் நூடுல்ஸ் வரை... ஈரான் போர் உணவுப்பொருட்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் | Iran War Affects Samosa Noodles Price

எரிபொருள் மற்றும் உணவு தயாரிக்க பயன்படும் பொருட்களின் விலை உயர்வதால் உணவின் விலை உயர, உடனடியாக அதன் தாக்கம் வெளிப்படுகிறது. குறிப்பாக, சமோசா, நூடுல்ஸ் போன்ற உணவுப்பொருட்களை வழக்கமாக விற்கும் வியாபாரிகள் அதை உடனடியாக உணர்கிறார்கள்.

மக்கள் வாங்கும் உணவின் அளவைக் குறைக்க, வியாபாரிகளின் வருவாய் குறைகிறது. வியாபாரிகள் விலையை அதிகரித்தாலோ, அது அவர்களுடைய வியாபாரத்தையே பாதிக்கும் அபாயமும் உள்ளது.

ஆக, நுகர்வோர், வியாபாரிகள் என இரு தரப்பினரும் இந்த விடயத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

பல ஆசிய நாடுகள் எரிசக்திக்கு மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்துள்ளன. போர் முடிவடையாததால், எரிசக்திக்கான, அதாவது, அடுப்பு எரிக்க பயன்படும் எரிவாயு, வாகனங்களுக்காக பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களுக்கான செலவு அதிகரிக்க, போக்குவரத்து செலவு உயர, தயாரிப்பு, பின் உணவு விநியோகம் என அனைத்து விடயங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.

இன்னொரு வகையான பாதிப்பு அதேபோல, போர் துவங்கியதிலிருந்தே, ஆசியாவில், பல நாடுகளில் சுற்றுலா கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப்பயணிகளை நம்பியிருக்கும் ஹொட்டல்கள், உணவகங்கள் மற்றும் தெரு வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாங்காகில், வியாபாரி ஒருவர் இப்படிக் கூறுகிறார், ‘நாம் எல்லோரும் ஒரே படகில்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம், அந்த படகு மூழ்கிவிடாது என்னும் நம்பிக்கையில்’. உலக நடப்பை எளிமையாக ஒரே வரியில் விளக்கிவிட்டார் அவர்!

ஆக, உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என கூறப்படுவது வெறும் சொல்வழக்காக இல்லாமல், இன்று நாம் அனைவரும் அனுபவிக்கும் ஒரு நிதர்சனமாகிவிட்டது என்றால் அது மிகையில்லை! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US