ஈரான் போருக்கு அமெரிக்கா கொடுத்துள்ள விலை., டிரில்லியன் டொலர் வரை செல்லும் அபாயம்
அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் தற்போது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பொருளாதார சுமையாக மாறியுள்ளது.
பெண்டகன் கணக்கீட்டின்படி, இதுவரை 29 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது.
ஆரம்பத்தில் 25 பில்லியன் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், ஆயுதங்கள், எரிபொருள், உபகரணங்கள் பழுது பார்க்கும் செலவுகள் அதிகரித்ததால் புதிய மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் முன் வாக்குமூலம் அளித்த பெண்டகன் அதிகாரி ஜே ஹர்ஸ்ட், “போர் நடைபெறும் இடங்களில் படைகளை பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ளன. மேலும், பழைய ஆயுதங்களை மாற்றி புதியவற்றை வாங்கும் போது விலை பல மடங்கு உயர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

உதாரணமாக, டோமஹாக் ஏவுகணைகள் பழைய கையிருப்பில் 2 மில்லியன் டொலர் மதிப்பில் இருந்தாலும், தற்போது புதியவை வாங்க 3 முதல் 3.5 மில்லியன் டொலர் செலவாகிறது.
அதேபோல் பேட்ரியட் ஏவுகணைகள் பழைய விலை 1 முதல் 2 மில்லியன் இருந்த நிலையில், புதியவை 4 முதல் 5 மில்லியன் டொலர் வரை உயர்ந்துள்ளன.
ஹார்வர்ட் கென்னடி பள்ளி ஆய்வின்படி, தினசரி 2 பில்லியன் டொலர் செலவாகிறது. இது "மிகப்பெரிய பனிப்பாறையின் மேல் பகுதி மட்டுமே” என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முழு செலவு 1 டிரில்லியன் டொலர் வரை செல்லும் அபாயம் உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 2027 நிதியாண்டுக்கான 1.5 டிரில்லியன் டொலர் பாதுகாப்பு பட்ஜெட்டை முன்மொழிந்துள்ளார். ஆனால், இந்தப் போர் தொடர்ந்தால், அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மேலும் சிக்கலாகும்.
ஈரான், அமெரிக்காவின் வளைகுடா கூட்டாளிகளை தாக்கத் திட்டமிட்டுள்ளதால், உலக எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமாகும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |