ஈரான் போர் மனசாட்சிக்கு எதிரானது! டிரம்பின் முக்கிய பாதுகாப்பு ஆலோசனை அதிகாரி ராஜினாமா
ஈரானுடனான போரை சுட்டிக்காட்டி அமெரிக்க அரசின் முக்கிய தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்க அரசு முக்கிய தலைவர் ராஜினாமா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் தேசிய உளவுத் துறை இயக்குநர் ஆகிய இருவருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கி வந்த அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவர் ஜோ கென்ட் ஈரானுடனான போரை சுட்டிக்காட்டி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜோ கென்ட் தன்னுடைய ராஜினாமா கடிதத்தில், தற்போது ஈரானுடன் நடந்து வரும் போர், தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக நடைபெறும் போர் என்பதால் அதனை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் அமெரிக்காவுக்கு எந்தவொரு நேரடி உடனடி அச்சுறுத்தல்களையும் வழங்கவில்லை என்றும், இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் சக்தி வாய்ந்த அமெரிக்க ஆதரவு குழுவின் அழுத்தம் காரணமாகவே இந்த போர் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கா வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜோ கென்ட் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜோ கென்ட் ராஜினாமா கடிதம் குறித்து எந்தவொரு பதிலையும் வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க சட்டம் சொல்வது என்ன?
அமெரிக்க சட்டத்தின் படி, நாடு ஒன்றின் மீது போர் தாக்குதல் நடத்த வேண்டும் என்றால், அந்நாட்டின் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். எதிரிகளின் திடீர் தாக்குதல் நடக்க போகிறது என்ற சூழ்நிலையில் மட்டும் தான் ஜனாதிபதியால் தன்னிச்சையாக தாக்குதலுக்கு உத்தரவிட முடியும்.
அப்படி இருக்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் நடத்த இருப்பதாக கூறி போரை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |